Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எமது துன்பங்களை அரசு வேடிக்கை பார்க்கிறது: காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள்

In இலங்கை
Updated: 11:11 GMT, Jan 1, 2018 | Published: 11:11 GMT, Jan 1, 2018 |
0 Comments
1249
This post was written by : Risha

எங்கள் உறவுகளை காணாமல் ஆக்கிவிட்டு, எங்களை வீதியில் இருந்து துன்பங்களை அனுபவிக்க விட்டு, இந்த அரசு வேடிக்கை பார்க்கின்றது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தமது உறவுகளை மீட்டுத்தரக்கோரி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக 316ஆவது நாளாக இன்று (திங்கட்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இறுதியுத்தத்தின் பின்னரும் அதற்கு முன்னைய காலப்பகுதிகளிலும் கைது செய்யப்பட்டும் படையினரிடம் சரணடைந்தும் உள்ள தங்களது உறவுகள் தொடர்பில் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித பதில்களும் இன்றி தங்கள் உறவுகளை மீட்டுத்தரக்கோரி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவுகள் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் தெரிவிக்கையில், ”எங்களுக்கு பல்வேறு தரப்புக்கள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்குகின்றபோதும், யாரும் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக இல்லை.

அனைவரும் மகிழ்ச்சியாக புத்தாண்டை வரவேற்கும் இந்த தருணத்திலும் நாம் வீதியிலிருந்து கண்ணீர் வடிக்கின்றோம். நல்லாட்சி அரசை நாங்கள் நம்பி இருந்தோம். ஆனால் பத்து மாதங்களுக்கு மேலாக போராடியும் அரசாங்கம் எமக்கு சாதகமான பதில் எதையும் தரவில்லை” என்றார்.

DSC02568

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg