ஜே.வி.பி. அலுவலகம் மீது கழிவு எண்ணெய் வீச்சு
மக்கள் விடுதலை முன்னணியின் கிளிநொச்சி தேர்தல் அலுவலகம் மீது இனந்தெரியாதவர்களால் கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளதாக அக்கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர்.
கிளிநொச்சியில் இவ்வலுவலகத்தை அமைப்பதற்கு முதல்நாளும் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கும் கட்சியின் உறுப்பினர்கள், ஊழல் மோசடி தொடர்பில் வெளிப்படையாக கருத்துக்களை தெரிவித்து வருவதாலேயே இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, தமது கட்சி காரியாலயத்திற்கு பாதுகாப்பு கோரவுள்ளதாகவும் தெரிவித்தனர்.