Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடத்தல்களில் ஈடுபட்ட இருவர் கைது!

In இலங்கை
Updated: 16:55 GMT, Jan 1, 2018 | Published: 16:46 GMT, Jan 1, 2018 |
0 Comments
1070
This post was written by : Surenth
IMG-20180101-WA0231

சட்டவிரோதமானமுறையில் ஒரு தொகை வல்லப்பட்டைகளை கடத்திச்செல்ல முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் இன்று (திங்கட்கிழமை) குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் 31வயதுடையவர் எனவும் அவரிடம் இருந்து 24 கிலோகிராம் 700 கிராம் வல்லப்பட்டை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட வல்லப்பட்டையின் பெறுமதி 21,40,000 ரூபாய் எனவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுனில் ஜயவர்தன கூறினார்.

இதேவேளை, சீனாப் பிரஜை ஒருவர் ஹொங் கொங் நாட்டுக்கு 1 கிலோ 25 கிராம் எடையுடைய தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதுடைய குறித்த நபர் கடத்திச்செல்ல முற்பட்ட தங்கத்தின் பெறுமதி 6,508,000.00 ரூபாய் பெறுமதியான எனவும் சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

IMG-20180101-WA0235 (1) IMG-20180101-WA0236 IMG-20180101-WA0230

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg