Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாரிய ஊழல் மோசடி குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது! (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 12:50 GMT, Jan 2, 2018 | Published: 03:37 GMT, Jan 2, 2018 |
0 Comments
1227
This post was written by : Varshini
maithiri-and-rajapaksa

பாரிய ஊழல் மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவினால் விசாரிக்கப்பட்ட பல்வேறு மோசடிகள் தொடர்பான 15 அறிக்கைகள் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்திருந்ததற்கு அமைய தற்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பாரிய ஊழல் மோசடி குறித்த அறிக்கை ஜனாதிபதிக்கு!

பாரிய ஊழல் மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) கையளிக்கப்படவுள்ளது.

ஆணைக்குழுவினால் விசாரிக்கப்பட்ட பல்வேறு மோசடிகள் தொடர்பான 15 அறிக்கைகள் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், குறிப்பாக 2010 தொடக்கம் 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரிப்பதற்காக, கடந்த 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.

கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதன்போது சுமார் 2000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதோடு, சுமார் 400 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரிக்கப்பட்டதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த தேர்தல் காலத்தில் இடம்பெற்ற மோசடி, ரக்ன லங்கா மற்றும் அவன்ட்கார்ட் நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடி, அம்பாந்தோட்டை துறைமுக திறப்பு விழாவின்போது இடம்பெற்ற மோசடி மற்றும் அமைச்சரவையின் அனுமதியின்றி அரிசி இறக்குமதி செய்யப்பட்டமை உள்ளிட்ட பல மோசடிகள் குறித்து விசாரிக்கப்பட்டன.

கடந்த ஆட்சியாளர்களின் ஊழல் மோசடி குறித்து விசாரித்து உரிய தண்டனை வழங்கப்படுமென ஆட்சிக்கு வந்த மைத்திரி அரசாங்கம், தமது உறுதிமொழியை நிறைவேற்றவில்லையென பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலும் நெருங்கும் நிலையில், இந்த அறிக்கை சமர்ப்பிப்பானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதேவேளை, மத்திய வங்கி பிணை முறி விநியோகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்த அறிக்கை கடந்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இது தொடர்பில் நாளைய தினம் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பை விடுக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg