Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் சாதிக்க ஸ்டெய்னுக்கு வாய்ப்பு

In கிாிக்கட்
Updated: 06:57 GMT, Jan 2, 2018 | Published: 06:56 GMT, Jan 2, 2018 |
0 Comments
1099
This post was written by : Elakkiya
201801021129016859_1_styen1._L_styvpf

இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரின் போது அதிக விக்கெட்களை கைப்பற்றிய தென் ஆபிரிக்க வீரர்கள் பட்டியலில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெய்ன் முதலிடத்திற்கு நகர்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தென் ஆபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டித் தொடர் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இத் தொடருக்கான தென் ஆபிரிக்க அணியில் ஸ்டெய்ன் இடம்பிடித்துள்ளார். தோள்பட்டை காயம் காரணமாக நீண்டகாலமாக அவதிப்பட்ட ஸ்டெய்ன் 14 மாதங்களின் பின்னர் அணிக்கு திரும்பியுள்ளார்.

இவர் இன்னும் ஐந்து விக்கெட்களை கைப்பற்றும் பட்சத்தில் 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 421 விக்கெட்களை கைப்பற்றிய அணியின் முன்னாள் அணித்தலைவர் ஷான் பொல்லாக்கின் சாதனையை முறியடிக்கமுடியும். ஸ்டெய்ன் 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg