Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்த நினைவுச்சொற்பொழிவு

In இலங்கை
Published: 05:25 GMT, Jan 2, 2018 |
0 Comments
1075
This post was written by : Varothayan
Tamil sangam colombo.jpg

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நாளை (புதன்கிழமை) மாலை 06.00 மணிக்கு சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்த நினைவுச்சொற்பொழிவு சங்கத் துணைத்தலைவர் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு தமிழ் வாழ்த்தினை செல்வி ஆரண்யா சுபாகரன் இசைக்க, ‘தமிழ் மறுமலர்ச்சியும், சி.வை.தாவும் – சமூகவியல் நோக்கு’ என்ற தலைப்பில் கொழும்புத் தமிழ்ச் சங்க கவின்கலைக்குழுச் செயலாளர் திரு.தெ.மதுசூதனன் உரை நிகழ்த்தவுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு இலக்கியக்களம் நிகழ்ச்சியில் ‘பனுவல் வெளி – எழுத்தாளர் தேவகாந்தனின் கந்தில் பாவை – நூல்’ என்னும் தலைப்பில் கல்வியியல் கல்லூரி ஓய்வுநிலை விரிவுரையாளர் கலாநிதி ந.ரவீந்திரன், தேசிய கல்வி நிறுவக தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி ராணி சீதரன், ஓய்வுநிலை ஆங்கில விரிவுரையாளர் திரு.ஏ.ஜே.புஷ்பராஜா ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளனர்.

இந்நிகழ்விற்கு ஓய்வுநிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு.எஸ்.இதயராஜா அவர்கள் தலைமை தாங்குவார்.

கொழும்புத் தமிழ்ச்சங்க நூலக சிறுவர் பிரிவில் 06ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு சிறுவர்களுக்கான கதை சொல்லி மகிழ்விக்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. திருமதி அருட்சோதி விஜயகோபல் அவர்கள் கதை சொல்லவுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg