Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சவுதி, ஐக்கிய அரபு ராச்சியத்தில் வற்வரி அறிமுகம்

In உலகம்
Updated: 05:56 GMT, Jan 2, 2018 | Published: 05:56 GMT, Jan 2, 2018 |
0 Comments
1433
This post was written by : Suganthini

சவுதி அரேபியாவும்  ஐக்கிய அரபு ராச்சியமும் முதன்முதலாக வற் வரியை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், புதிய நடைமுறை   மேற்படி இரு நாடுகளிலும் நேற்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு  வந்துள்ளது.

இரு நாடுகளிலும் விற்கப்படும் பெரும்பாலான பொருட்களுக்கும், சேவைகளுக்கும் 5 சதவீதம் வரி விதிக்கப்படுகின்றது.

வளைகுடா நாடுகள், நீண்டகாலமாக வரியில்லா வாழ்க்கை என்ற வாக்குறுதி மூலம் வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஈர்த்துவந்தது. ஆனால், தற்போது கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துவரும் நிலையில், வருவாயை அதிகரிக்க மேற்படி இரு நாடுகளின் அரசாங்கங்களும் தீர்மானம் எடுத்துள்ளன.

வற் வரி காரணமாக முதல் ஆண்டில், சுமார் 12 பில்லியன் திராம் வருவாய் கிடைக்குமென்று ஐக்கிய அரபு ராச்சியம் மதிப்பீடு செய்துள்ளது.

மேலும் பெற்றோல், டீசல், உணவு, ஆடைகள், அத்தியாவசியச் சேவைகள் மற்றும் ஹொட்டல் அறைகள் ஆகியவற்றுக்கு வற்வரி பொருந்தும். ஆனால், மருத்துவச் சிகிச்சை, நிதிச் சேவைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து ஆகியவை  வற் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

சவுதியில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட வருவாய், எண்ணெய்த் தொழிலிலிருந்து கிடைக்கின்றது. இதேவேளை, ஐக்கிய அரபு ராச்சியத்தில் அவ்வருவாயானது, 80 சதவீதமாகவே உள்ளது.

அரசாங்கங்களின் வருவாயைப் பெருக்க இருநாடுகளும் முயற்சிக்கின்றன. ஆனால், வருமான வரியை அமுல்படுத்தும் எந்தவொரு திட்டமும் இரு நாடுகளிடமும் இல்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg