Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முத்தலாக் கூறி விவாகரத்து பெறுவதை குற்றவியலாக கருத முடியாது: காங்கிரஸ் எதிர்ப்பு!

In இந்தியா
Published: 10:14 GMT, Jan 2, 2018 |
0 Comments
1104
This post was written by : Kemasiya

முஸ்லிம் சட்டத்தில் உள்ள முத்தலாக்  கூறி விவாகரத்து பெறும் முறையை ஒரு குற்றவியல் செயற்பாடாக கருத முடியாது என,  காங்கிரஸின் சட்டவல்லுனர் பி.எல்.புனியா தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்கிழமை) ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

ஒரு சிவில் நடைமுறையை குற்றிவியலாக கருதி தண்டனை வழங்க முடியாது எனக் கூறிய அவர், தற்போது நாடாளுமன்றின் மக்கள் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதே வேளை குறித்த சட்டமூலம் முத்தலாக் கூறி விவாகரத்து பெறும் முறையை தடுத்து, முஸ்லிம் பெண்களை பாதுகாக்கவே கொண்டுவரப்பட்டது என புனியாவின் கருத்துக்கு எதிர்க்கருத்தை முன்வைத்துள்ளார் பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி.

முஸ்லிம் சட்ட நடைமுறையில் உள்ள முத்தலாக் கூறி விவாகரத்து பெறும் முறை, முஸ்லிம் பெண்களை அதிகம் பாதிப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இதையடுத்து குறித்த சட்ட நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் முகமாக மத்திய அரசின் குழு தயாரித்த சட்டமூலம், நாடாளுமன்றின் மக்கள் சபையில் கடந்த (டிசெம்பர்) 28ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த சட்டமூலம் பல எதிர்ப்புக்களையும் தாண்டி நாளை நாடாளுமன்றின் மேல் சபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதை முன்னிட்டு இன்று காங்கிரஸ் மேற்கொண்ட சட்ட ஆய்வினை தொடர்ந்து, புனியா காங்கிரஸ் சார்பில் வழங்கிய செவ்வியிலேயே மேற்படி எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

punia supra

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg