Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அபிவிருத்திக்கு முட்டுக்கட்டையா? நிரூபித்தால் பதவி விலகுவேன்- வியாழேந்திரன்

In இலங்கை
Updated: 09:35 GMT, Jan 2, 2018 | Published: 09:35 GMT, Jan 2, 2018 |
0 Comments
1198
This post was written by : Risha

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைவிட வேறெந்த கட்சியேனும் அதிகப்படியான அபிவிருத்தி செய்தமை நிரூபிக்கப்படின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவேன் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் சவால் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களை அறிவுறுத்தும் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த இரண்டரை வருடகாலத்தில் இந்த மாவட்டத்திற்கான பாரிய அபிவிருத்தி பணிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பே மேற்கொண்டுள்ளது.

ஆனால், கூட்டமைப்பு அபிவிருத்தி விடயத்தில் உதவாத கட்சி, அபிவிருத்திக்கு முட்டுக்கட்டையான கட்சி, இவர்கள் கடந்த காலங்களில் அபிவிருத்தியே செய்யவில்லை, உரிமை உரிமையென வெறுமனே பேசிக்கொண்டே இருக்கின்றார்கள் என்ற பலமானதொரு விமர்சனம் ஏனைய கட்சிகளை சார்ந்தவர்களால் முன்வைக்கப்படுகின்றது.

இதில் உள்ள உண்மை என்ன, ஜனநாயகம் என்ன என்பதை அனைவரும் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

நாங்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மூலம் நடத்திய வேலைத்திட்டங்களை பட்டியல்படுத்த வேண்டும். அந்த வேலைத்திட்டங்களை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg