Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எனது படத்தை வைத்து பிரசாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மஹிந்த

In இலங்கை
Updated: 11:07 GMT, Jan 2, 2018 | Published: 11:07 GMT, Jan 2, 2018 |
0 Comments
1138
This post was written by : Puvanes

தேர்தல் பிரசாரங்களுக்கான தனது உருவப்படங்களை சட்டவிரோதமான வகையில் பயன்படுத்துபவர்கள் மீது தகுந்த நடிவடிக்கை எடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அநுராதபுரம் – மதவாச்சிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் காணப்பட்ட மஹிந்தவின் உருவப்பட பதாதைகள் பொலிஸாரினால் அகற்றப்பட்ட விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) மஹிந்த தேசப்பிரியவிற்கு, மஹிந்த ராஜபக்ஷ அனுப்பி வைத்த கடிதம் மூலமாகவே மேற்கண்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வேட்பாளர்கள் எனது உருவப்படத்தை கொண்டு செய்யும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு தாம் எந்தவகையிலும் பொறுப்பில்லை என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானவர்கள் சட்டத்திற்கு முரணான தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது, சட்ட ரீதியில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் கடிதம் மூலமாக மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg