Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ். நீர்வேலியில் விபத்து: இருவர் உயிரிழப்பு

In இலங்கை
Updated: 13:10 GMT, Jan 2, 2018 | Published: 11:39 GMT, Jan 2, 2018 |
0 Comments
1702
This post was written by : Varothayan

யாழ்ப்பாணம் நீர்வேலிப்பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

முச்சக்கர வண்டியுடன் ஹயெஸ் வான் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதன் போது முச்சக்கர வண்டியில் பயணித்த 5 வயதுச் சிறுமி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், சாரதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீதியைக் கடக்கும் வெள்ளைக்கோட்டுக்கு அருகாமையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2 3

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg