Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழர்கள் ஏமாற்றப்படுகின்றார்கள்! – யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது நாமே: மஹிந்த

In இலங்கை
Published: 13:09 GMT, Jan 2, 2018 |
0 Comments
1365
This post was written by : Puvanes
mahinda002

ஒருபக்கம் தமிழர்களையும், அடுத்த பக்கம் சிங்களவர்களையும் ஏமாற்றும் செயற்பாடுகளையே தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஒன்றிணைந்த பொதுஜன கூட்டணியின் பிரசார பணிகள் அங்குரார்பனம் செய்யும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடுகையில்,

அனைத்து வகையிலும் மக்களுக்கு தீங்கிழைக்கும் வகையிலேயே தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு கொண்டு வருகின்றது. கடந்தகாலத்தில் நாம் முன்னெடுத்த அபிவிருத்தி செயற்பாடுகள் எதுவும் இப்போது நடைபெறவில்லை.

முக்கியமாக அனைத்து தரப்பிற்கும் பொய்யான வாக்குறுதிகளே அளிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதே நாட்டில் நல்லிணக்கம் மலர காரணமானது என்பதை நினைவு படுத்திக்கொள்ளவேண்டும்.

30 வருடகால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்து அபிவிருத்திகளை ஏற்படுத்தினோம் ஆனால் இப்போது அந்த நிலைகாணப்படுகின்றதா? குப்பை முதல் அனைத்திலும் பிரச்சினைகள் ஏற்பட்டன.

சர்வதேச ரீதியில் பல்வேறு பிரச்சினைகள் உருவெடுத்தன இதற்கு காரணம் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடுகளே. இதனை தெளிவு படுத்தி நாம் பிரிந்து வரச் சொன்னோம் ஆனால் பதவி ஆசையினால் யாரும் வரவில்லை.

இப்போது நாடு அடைந்துள்ள வீழ்ச்சிக்கு காரணம் ஜனவரி 8ஆம் திகதி நாம் செய்த முட்டாள்தனமே என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ளவேண்டும். அதேபோன்று தாமரை மொட்டுக்கு வாக்களிக்காவிட்டால் அது நாட்டையும், யுத்த வெற்றி வீரர்களான இராணுவத்தையும் காட்டிக்கொடுக்கும் செயல் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளவேண்டும்.

நாட்டை பிளவுபடுத்தும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும், அதேசமயம் எதிர்கால சந்ததிக்காக பாடுபடவுள்ள தாமரைமொட்டுக்கு வாக்களித்து அதனை வெற்றியடைய செய்யவேண்டும் எனவும் மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg