Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமர் மீது தேர்தல் கண்காணிப்புக்குழு குற்றச்சாட்டு!

In இலங்கை
Published: 13:59 GMT, Jan 2, 2018 |
0 Comments
1057
icon_com
This post was written by : Puvanes
ranil001

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியல் ரீதியில் இலாபமீட்ட முயற்சி செய்து வருவதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களை கண்காணிப்பதற்கான தேசிய அமைப்பு (கபே) குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவினால் உருவாக்கப்பட்ட ஊடக ஒழுக்கவிதிகளை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டபோதே பிரதமர் அரசியல் இலாப மீட்டும் வகையில் கருத்துகளை வெளியிட்டுள்ளார் என குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனைவரும் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பாளர்கள் என நம்புகின்றேன் என பிரதமர், இன்று அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடக ஒழுக்கவிதிகள் ஆவணத்தில் கைகொப்பமிடும் நிகழ்வின்போது கருத்து வெளியிட்டிருந்தார்.

குறித்த கருத்தானது மறைமுகமாக அரசியல் இலாபமீட்டும் செயற்பாடு என கபே அமைப்பு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது.

மேலும், தேர்தல் ஆணைக்குழுவின் நிர்வாக நடவடிக்கையினை அடிப்படையாகக் கொண்டு பிரதமர் இத்தகைய கருத்தினை மறைமுகமாக தெரிவித்துள்ளார் எனவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg