Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்தவின் படத்தினால் கட்சிக்குள் சர்ச்சை ஏற்பட்டுள்ளது!: தயாசிறி

In இலங்கை
Published: 16:16 GMT, Jan 2, 2018 |
0 Comments
1158
This post was written by : Puvanes
daya001

தேர்தல் பிரசாரத்திற்காக முன்னாள் ஜனாதிபதியின் புகைப்படங்களை பயன்படுத்துவது முறைகேடான செயல் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொதுஜன முன்னணியின் தலைவரான முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிசின் புகைப்படத்தை பிரசாரத்திற்கு பயன்படுத்தாமல் மஹிந்தவின் படத்தை பயன்படுத்துவது அந்தக் கட்சிக்குள் பூசலை ஏற்படுத்தியுள்ளதாக தயாசிறி கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் பொதுஜன முன்னணிக்கு விருப்பமற்ற தலைவராக ஜீ.எல்.பீரிஸ் காணப்படுகின்ற விடயம் தனக்கு கவலையளிப்பதாக குறிப்பிட்ட அவர், பீரிஸின் புகைப்படத்தை பயன்படுத்த அக்கட்சியை சேர்ந்த எவரும் விரும்பவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே பொதுஜன முன்னணி கட்சியானது தனது பிரசார நடவடிக்கைகளுக்காக அந்தக் கட்சியின் தலைவரின் படங்களை உபயோகிக்க வேண்டும் எனவும் தயாசிறி ஜயசேகர ஆலோசனை ஒன்றினையும் முன்வைத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg