Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார் சுரேஸ்! (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 03:16 GMT, Jan 3, 2018 | Published: 03:16 GMT, Jan 3, 2018 |
0 Comments
1647
This post was written by : Varshini

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், யாழ். நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று (புதன்கிழமை) காலை வெளியிடப்பட்டது.

புதிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி அதனை பெற்றுக்கொண்டார்.

அத்தோடு, தேர்தல் பிரசார கீதத்தினையும் சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளியிட்டு வைக்க, ஜனநாயக தமிழரசு கட்சியின் தலைவர் வி.எஸ்.சிவகரன் அதனைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து வேட்பாளர்கள் அறிமுகம் இடம்பெற்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈரோஸ், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கட்சி, ஜனநாயக தமிழரசு கட்சி உள்ளிட்ட பல கட்சிகளையும் பொது அமைப்புக்களையும் இணைத்து தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இக்கூட்டமைப்பானது, எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

tamilar viduthalai kootamaippu (2) tamilar viduthalai kootamaippu (3)

புதிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் வேட்பாளர் அறிமுகமும் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது.

நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இந்நிகழ்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கூட்டமைப்பில் போட்டியிட முடியாதென வெளியேறியிருந்தது.

அதன் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈரோஸ், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளையும் பொது அமைப்புக்களையும் இணைத்து தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பென்ற புதிய கட்சியை ஆரம்பித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம் யாழ்ப்பாண வேட்பாளர்களது அறிமுகமும் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg