Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பலஸ்தீனத்துக்கான உதவி நிறுத்தப்படுமென ட்ரம்ப் எச்சரிக்கை

In உலகம்
Published: 04:11 GMT, Jan 3, 2018 |
0 Comments
1187
This post was written by : Suganthini

இஸ்ரேலுடன் நிலையான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு பலஸ்தீனம் ஒத்துழைக்காவிடின், அந்நாட்டுக்கான உதவித்தொகையை நிறுத்தும் சாத்தியம் காணப்படுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவீட்டர் செய்தியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அவர் இதனைக் கூறியுள்ளார்.

அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘இஸ்ரேலுடன் நிலையான சமாதானப் பேச்சுவார்த்தையை நடத்த பலஸ்தீனம் முன்வர வேண்டுமெனவும், அவ்வாறு சாமாதானப் பேச்சுக்கு பலஸ்தீனம் முன்வரவில்லையாயின், அந்நாட்டுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படும் உதவித்தொகையை நிறுத்தும் சாத்தியம் காணப்படுகின்றது.

அத்துடன், பலஸ்தீனத்துக்கு நாம் வழங்கிவரும் உதவித்தொகைக்கு பலஸ்தீனம் நன்றி தெரிவிக்கவில்லையென்பதுடன், அமெரிக்காவையும் பலஸ்தீனம் மதித்து நடக்கவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பலஸ்தீன அகதிகளுக்காக ஐ.நா.வுக்கு வழங்கிவந்த உதவித்தொகையையே அமெரிக்கா நிறுத்துமென, ஐ.நா. பாதுகாப்புச் சபையில்     ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹலே    தெரிவித்துள்ளார்.

சமாதானப் பேச்சுவார்த்தைக்கு பலஸ்தீனம் இணங்கும்வரை அந்நாட்டுக்கான உதவித்தொகையையோ அல்லது மேலதிக நிதியுதவியையோ அமெரிக்கா வழங்காதெனவும், அவர் கூறியுள்ளார்.

புனித நகரான ஜெருசலேமை, இஸ்ரேலும் பலஸ்தீனமும் தமது நாடுகளின் தலைநகரமென்று கூறிவந்த நிலையில், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை ஒருதலைப்பட்சமாக கடந்த டிசெம்பர் 6ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அங்கீகரித்திருந்தார்.

இந்தத் தீர்மானத்தை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டுமென்று அமெரிக்காவை வலியுறுத்தி, ஐ.நா.வினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக 128 நாடுகள் வாக்களித்துள்ளன.

ஒருதலைப்பட்சமான அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மூலம், அமெரிக்காவினால் நடுநிலை வகிக்க முடியாதென்பதை வெளிக்காட்டுவதாக, பலஸ்தீனம் கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg