அ.தி.மு.க. சார்பில் புதிய தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்!: முதலமைச்சர் அறிவிப்பு
அ.தி.மு.க. சார்பில் புதிய தொலைக்காட்சி மற்றும் நாளிதழை ஆரம்பிப்பதற்கு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்று சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கட்சி சார்ந்த தகவல்கள் மற்றும் ஆட்சி சார்ந்த விடயங்களை மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் வகையில் தனியான தொலைக்காட்சி மற்றும் நாளிதழை ஆரம்பிக்கவுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை உள்ளூராட்சித் தேர்தலுக்கு தயாராகுமாறு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழகத்தில் உள்ளூராட்சி தேர்தல் நடத்துவதற்;கான வாய்ப்புகள் இருப்பதால் அதற்கு தயாராகுமாறு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார்.