Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அழித்தவர்கள் காக்கப்போகிறார்களாம்!- இதை எப்படி நம்புவது: வியாழேந்திரன்

In இலங்கை
Updated: 07:57 GMT, Jan 3, 2018 | Published: 07:57 GMT, Jan 3, 2018 |
0 Comments
1269
This post was written by : Risha

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் அரசின் முகவராக இருந்துகொண்டு எமது மக்களை கொலை செய்தவர்கள், தற்போது தமிழ் மக்களின் நிலங்களையும் மக்களையும் பாதுகாக்கப் போகிறோம் என கூறுவது வேடிக்கையாக உள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏறாவூரில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற தேர்தல் அலுவலகத்தை நேற்று (செவ்வாய்கிழமை) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாங்கள் நிரந்தர தீர்வை நோக்கி செல்லும் போது அரசாங்கத்துடன் இணைந்து செல்லும் வாய்ப்பு இருக்கவில்லை. போராட்டத்தில் நாங்கள் பல இழப்புகளை எதிர்கொண்டோம். இன்று நாங்கள் முடிந்தளவு ஜனநாயக ரீதியில் முன்னெடுப்புக்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எவருடனும் சோரம் போகாமல் தமிழ் தேசியத்தில் உறுதியாக மக்களுக்காக குரல் கொடுப்பதன் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை கொண்டு உருவாக்கப்பட்ட ஜனநாயக போராளிகள் கட்சி எங்களுடன் இணைந்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வெருகல் முதல் துறைநீலாவணை வரை பல்லாயிரக்கணக்கான நிலத்தை விற்றவர்கள் தமிழ் மக்களின் நிலங்களையும் மக்களையும் பாதுகாப்போம் எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

அரசின் முகவராக இருந்துகொண்டு வெள்ளை வானில் பல இளைஞர்களை கடத்தி கொலை செய்தவர்கள், காணாமல் ஆக்கச் செய்தவர்கள் தற்போது தமிழ் மக்களைப் பாதுகாக்கப் போகிறார்களாம்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாத ஆட்சி மாற்றத்தின் பின்பு அனைவருக்கும் சுதந்திரம் கிடைத்துள்ளது. ஒரு ஊடகவியாளர் காணாமல் ஆக்கப்படவில்லை. சுடப்படவில்லை யாரும் கடத்தப்படவில்லை.

இந்நிலையில், எமது இருப்புக்களை காப்பாற்ற வேண்டுமானால் எமது மக்கள் அணிதிரண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg