Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் ‘தளபதி’ விஜய்யுடன் கைகோர்த்த ஏ.ஆர்.ரஹ்மான்

In சினிமா
Updated: 09:46 GMT, Jan 3, 2018 | Published: 09:33 GMT, Jan 3, 2018 |
0 Comments
1102
This post was written by : Varothayan
Vijay Rahman

‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் இசையமைப்பாளர் யார்? என்ற கேள்வி கடந்த ஓரிரு மாதங்களாக புதிராகவே இருந்தது.

மீண்டும் ‘கத்தி’ படக்கூட்டணியா? (அனிருத்), மீண்டும் ‘தெறி’ வெற்றி தந்த கூட்டணியா? (ஜி.வி.), அல்லது சிலிர்க்க வைத்த ‘மெர்சல்’ கூட்டணியா? என ரசிகர்களே தலையைப் பிய்த்துக் கொண்டார்கள்.

இந்நிலையில், ‘விஜய் 62′ விற்கான தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘உதயா’, ‘அழகிய தமிழ் மகன்’, ‘மெர்சல்’ படங்களை தொடர்ந்து நான்காவதாக விஜய் – ரஹ்மான் கூட்டணி ‘விஜய் 62′ இற்காக சேரவுள்ளது.

அதேபோல், ‘கஜினி’ ஹிந்தி ரீமேக்கில் முருகதாஸூடன் பணியாற்றியதற்கு பின்னர் ரஹ்மான் மீண்டும் அவருடன் கைகோர்த்துள்ளார். எனவே, மீண்டும் ஒரு பிரமாண்டத்தை ரசிகர்கள் அனுபவிக்க முடியும்.

இதேவேளை, கிரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகவும், சந்தானம் கலை இயக்குனராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg