Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹத்துருசிங்கவின் விலகல் வீரர்களின் பொறுப்புகளை உணர செய்துள்ளது: பங்களாதேஷ் பயிற்சியாளர்

In கிாிக்கட்
Updated: 04:43 GMT, Jan 4, 2018 | Published: 04:00 GMT, Jan 4, 2018 |
0 Comments
1509
This post was written by : Anojkiyan

பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்கவின் பதவி விலகலானது பங்களாதேஷ் வீரர்களின் பொறுப்புகளை உணர செய்துள்ளது என அணியின் இடைக்கால பயிற்சியாளர் ரிச்சர்ட் ஹல்சால் தெரிவித்துள்ளார்.

மேலும், பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து சந்திக ஹத்துருசிங்க விலகியமை, அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை எதிர்வரும் முக்கோண ஒருநாள் தொடரில் சாதனை செய்யும் வளம், பங்களாதேஷ் அணியிடம் இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியதன் பின்னர், சந்திக்க ஹத்துருசிங்க இலங்கை அணியை வழிநடத்துகிறார். இந்நிலையில் அவரது தலைமையில் இலங்கை அணி முதலாவதாக பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கின்றமை ஹத்துருசிங்கவிற்கு கடும் சவாலாக அமைந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg