Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கமல்ஹாசனின் கருத்துக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்!

In இந்தியா
Published: 07:23 GMT, Jan 4, 2018 |
0 Comments
1223
This post was written by : Kemasiya

ஆர்.கே.நகர். தேர்தலில் குக்கர் சின்னம் பெற்ற வெற்றி, பணம் கொடுத்து வாங்கப்பட்டது என்ற நடிகர் கமல்காஷனின் கருத்துக்கு டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த அவர், நடிகர் கமல்ஹாசனின் கருத்து ஆர்.கே.நகர் மக்களை இழிவு படுத்துவதாக உள்ளதாகவும், அதனை மிக வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“தேர்தலின் போது வாக்களித்தவர்கள் மக்கள். எனவே இவ்வாறான கருத்துக்கள் மக்களை இழிவுபடுத்துவதே” என அவர் தெரிவித்துள்ளார்.

அன்மையில் இடம்பெற்ற  ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற டி.டி.வி. தினகரன், அத் தொகுதிக்கான சட்டசபை அமைச்சராக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg