Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புத்தாண்டில் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்ட முதல் பலஸ்தீன இளைஞன்

In உலகம்
Updated: 06:11 GMT, Jan 4, 2018 | Published: 06:11 GMT, Jan 4, 2018 |
0 Comments
1283
This post was written by : Risha

மேற்கு கரையின் ரமல்லாஹ் நகரில் இஸ்ரேல் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலஸ்தீன இளைஞன் உயிரிழந்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) குறித்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருந்த நிலையில், இஸ்ரேல் படையினரால் இவ்வாண்டில் கொல்லப்பட்ட முதல் பலஸ்தீன இளைஞன் இவரென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலஸ்தீன ஆரப்பாட்டக்காரர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையிலான மோதலின்போதே குறித்த உயிரிழப்பு சம்பவித்துள்ளது.

குறித்த பலஸ்தீன இளைஞன் ஆயுதத்துடன் காணப்பட்டதாகவும், குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் ராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்க ஜனாதிபதி கடந்த டிசம்பர் மாதம் ஆறாம் திகதி அறிவித்ததை தொடர்ந்து பலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வன்முறை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg