Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நல்லூர் கோயில் வீதியில் தையல் நிலையம் விஷமிகளால் தீக்கிரை

In இலங்கை
Updated: 06:28 GMT, Jan 4, 2018 | Published: 06:26 GMT, Jan 4, 2018 |
0 Comments
1139
This post was written by : Elakkiya
IMG-083e5a9ccc74cc77751dee259845b30e-V

யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் அமைந்துள்ள தையல் நிலையம் ஒன்று விசமிகளால் தீவைத்து எரியூட்டப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் மெய்பாதுகாவலர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கின் சந்தேகநபரின் குடும்பமே இத்தகைய நாசகார செயலை செய்ததாக தையல் நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், “கடந்த 2009 டிசம்பர் மாதத்திலிருந்து நல்லூர் கோயில் வீதியில் தையல் நிலையம் வைத்துள்ளேன். என்னை அந்த இடத்திலிருந்து அகற்ற அயலவர்கள் பல தடவைகள் முயற்சிகளை முன்னெடுத்தனர். மின்சார சபைக்கு முறைப்பாடு செய்து எனது கடைக்கான மின் இணைப்பையும் துண்டித்தனர். பின்னர் உரிய காரணங்களைக் கூறி மீளவும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. எனது கடையின் பூட்டை உடைத்த அயலவர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே அவர்கள் இந்த இழி செயலை செய்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

IMG-d9d082102e7adbedac9572e1ae8e31c6-V
IMG-c6764b3f158267388c1682df575eefb1-V
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg