Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னாபிரிக்க மண்ணில் இந்திய அணி எவ்வாறு விளையாடப் போகிறது? ஆவலுடன் காத்திருக்கும் பிலாண்டர்

In கிாிக்கட்
Updated: 07:38 GMT, Jan 4, 2018 | Published: 07:37 GMT, Jan 4, 2018 |
0 Comments
1158
This post was written by : Anojkiyan
ver

தென்னாபிரிக்க மண்ணில் இந்திய அணி எவ்வாறு விளையாடப் போகிறது என்பதை காண சுவாரஸ்யமாக இருக்கும் என தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வெரோன் பிலாண்டர் தெரிவித்துள்ளார்.

இரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“இந்திய அணி சமீபகாலமாக அதிகமான போட்டிகளை உள்நாட்டில் தான் விளையாடி இருக்கிறது. எனவே தென்னாபிரிக்க மண்ணில் அந்த அணி எந்த மாதிரி விளையாடப்போகிறது என்பதை பார்க்கவே சுவாரஸ்யமாக இருக்கும். இங்கு விளையாடுவது முற்றிலும் வித்தியாசமானது. எனவே இந்த தொடரில் எங்களை சமாளிப்பதற்கு இந்திய அணி எந்த அளவுக்கு தயாராகி இருக்கிறது என்பதை அறிவதற்கு முதலாவது டெஸ்ட் முடியும் வரை காத்திருக்க வேண்டும்.

ஓரளவு புற்கள் உள்ள ஆடுகளம், மேகமூட்டமான சீதோஷ்ண நிலை நிச்சயம் எங்களுக்கு சாதகமாக இருக்கும். இதனால் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் கூட களம் இறங்க வாய்ப்பு உள்ளது. ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக 3 வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களம் கண்டு சாதித்து வருகிறோம். சூழலுக்கு தக்கபடி விளையாடு பதினொருவர் அணி தேர்வு செய்யப்படும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg