Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2017ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை நடிகராக யோகி பாபு!

In சினிமா
Updated: 10:16 GMT, Jan 4, 2018 | Published: 10:16 GMT, Jan 4, 2018 |
0 Comments
1368
This post was written by : Surenth

2017ஆம் ஆண்டுக்கான சிறந்த நகைச்சுவை நடிகராக யோகி பாபு ரசிகர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சினிமா தொடர்பான இணையத்தளம் ஒன்று நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, யோகி பாபு 47% புள்ளிகளுடன் முதலாவது இடத்திலும், 24% புள்ளிகளை பெற்ற சூரி இரண்டாவது இடத்தையும், 13% புள்ளிகளை பெற்ற தம்பி ராமையா மூன்றாவது இடத்தையும் 8% புள்ளிகளுடன் ரொபொ சங்கர் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

குறித்த ஊடகம் நடத்திய ஆய்வில், யோகி பாபு, சூரி, சதீஷ், ரொபோ சங்கர், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோரின் பெயர்கள் வெளியிடப்பட்டிருந்தன. இதன்படி, யோகி பாபு முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டு வடிவேலு, விவேக், சந்தானம் போன்ற நகைச்சுவை நடிகர்கள் பெரிதாக திரைப்படங்களில் நடிக்காத காரணத்தால் யோகி பாபுவிற்கு இவ்வாறு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg