Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனோஜ் சிரிசேனவை அமைச்சராக நியமித்தார் மைத்திரி!

In இலங்கை
Updated: 11:58 GMT, Jan 4, 2018 | Published: 10:15 GMT, Jan 4, 2018 |
0 Comments
1416
This post was written by : Puvanes
manoj001

தென் மாகாண சபை உறுப்பினர் மனோஜ் சிரிசேன  மாகாண அமைச்சராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் இன்று (வியாழக்கிழமை) குறித்த பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

அதன்படி, தென் மாகாண விளையாட்டு, இளைஞர் விவகாரம், கலாச்சார மற்றும் கலைத்துறை, சமூக சேவைகள், சிறுவர் பாதுகாப்பு, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக மனோஜ் சிரிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த பதவிப் பிரமாண நிகழ்வின் போது தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார மற்றும் மாகாண முதலமைச்சர் சாண் விஜேயலால் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீரசுமன வீரசிங்கவின் பதவி நீக்கத்தினைத் தொடர்ந்து அந்தப் பதவி மனோஜ் சிரிசேனவிற்கு வழங்கப்பட்டுள்ளது என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg