Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்திய வங்கி விவகாரம்! – பிரதமர் அலுவலகத்தின் தகவல்

In இலங்கை
Published: 11:39 GMT, Jan 4, 2018 |
0 Comments
1341
This post was written by : Puvanes

மத்திய வங்கி பிணைமுறி மோசடியை விசாரணை செய்ய உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு பிரதமர் அலுவலகம் நன்றிகளைத் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தற்போது மத்திய வங்கி ஊழல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று 2016 ஆம் ஆண்டு சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலாக கோப் குழுவின் விசாரணை அறிக்கையும் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது சட்டமா திணைக்களமானது இந்தவிடயத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, இந்த விடயம் நல்லாட்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கடந்தகாலங்களில் முன்வைக்கப்பட்டுவந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது எனவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg