Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொருளாதார உறவை வலுப்படுத்த EU தூதுவர் கியூபா விஜயம்

In ஐரோப்பா
Published: 12:12 GMT, Jan 4, 2018 |
0 Comments
1092
This post was written by : Risha

உறுப்பு நாடுகளுடனான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தூதுவரான ஃபெடரிகா மொகர்னி (Federica Mogherini), கியூபாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தூதுவர் நேற்று (புதன்கிழமை) கியூபாவிற்கு பயணித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் கியூபாவிற்கும் இடையிலான வலுவான உறவை உறுதிப்படுத்தும் வகையில் இவ்விஜயம் அமைந்ததாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது இரண்டு விஜயத்தின் முதல் உத்தியோகப்பூர்வ சந்திப்பில் கியூபாவின் வெளிநாட்டு முதலீட்டு மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் ரோட்ரிகோ மால்மிகாவை சந்தித்து உரையாடியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg