Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய பாராளுமன்ற சர்வகட்சி குழுவினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

In இலங்கை
Published: 15:44 GMT, Jan 4, 2018 |
0 Comments
1167
icon_com
This post was written by : Puvanes
maithri met001

இலங்கை தொடர்பான பிரித்தானிய பாராளுமன்ற சர்வகட்சி குழுவினர் இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (வியாழக்கிழமை) விடுத்துள்ள செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்றதன் பின்னர் பொதுநலவாய நாடுகளுடனான தொடர்புகளை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொண்டு வருகின்றன.

பொதுநலவாய நாடு என்ற வகையில் இலங்கையுடன் காணப்படும் தொடர்புகளை பலப்படுத்துதல் மற்றும் இருநாடுகளுக்கிடையிலான வர்த்தக முதலீட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்குடன் இந்த தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர் என குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திப்பின்போது, ஜனநாயகத்தை பலப்படுத்துதல், பொருளாதார அபிவிருத்தி, விசேட அபிவிருத்தி செயற்திட்டங்கள் மற்றும் விசேட வர்த்தக துறைகளில் இலங்கை கடந்த காலத்தில் முன்னெடுத்த செயற்திட்டங்களில் அதிக முன்னேற்றத்தினை அவதானிக்க முடிந்துள்ளதாக சர்வகட்சி குழுவினர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

புதிய தொழில்நுட்பம், வேலை வாய்ப்புக்களை அதிகரித்தல் மற்றும் கல்வி வாய்ப்புக்களை மேலும் பயனுள்ளதாக்குவதற்கு இரு நாடுகளுக்கிடையேயும் காணப்படும் தொடர்புகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் பிரித்தானியாவில் இடம்பெறவுள்ளதுடன் அதனுடன் இணைந்ததாக இரு நாட்டு உறவுகளை மேலும் உறுதி செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் பிரித்தானிய தூதுக்குழுவினர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)