Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹிந்திப் படங்களில் நடிக்க சிரமப்படும் நித்யா மேனன்!

In சினிமா
Updated: 05:43 GMT, Jan 5, 2018 | Published: 05:43 GMT, Jan 5, 2018 |
0 Comments
1197
This post was written by : Ravivarman

மெர்சல் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக நடித்து வரும் பிராணா படத்தில் நித்யா மேனன் சிரமப்பட்டு நடிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விஜய் – நித்யா மேனன் நடிப்பில் கடைசியாக வெளியாகி வரவேற்பை பெற்ற மெர்சல் படத்தைத் தொடர்ந்து நித்யா மேனன் தற்போது, ‘பிராணா’ மற்றும் ‘அவ்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதில் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தியில் தயாராகி வரும் படம் ‘பிராணா’. வி.கே.பிரகாஷ் இயக்கும் இந்த படத்தில், 4 மொழி படங்களுக்கும் தேவையான காட்சிகளை மாற்றி மாற்றி எடுத்து வருகிறார்கள்.

இதில் மலையாளம் உள்ளிட்ட 3 மொழிகளில் சுலபமாக பேசி நடிக்கும் நித்யாமேனன், ஹிந்தியில் நடிக்கும் போது மட்டும் சிரமப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதேபோல் தெலுங்கில் உருவாகி வரும் ‘அவ்’ படத்தில் காஜல் அகர்வாலுடன் இணைந்து நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg