Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னாபிரிக்காவில் ரயில் விபத்து: 18 பேர் உயிரிழப்பு, 268 பேர் காயம்

In
Updated: 07:22 GMT, Jan 5, 2018 | Published: 07:22 GMT, Jan 5, 2018 |
0 Comments
1311
This post was written by : Elakkiya

தென்னாபிரிக்காவில் பயணிகள் ரயில், டிரக் வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 268 பேர் காயமடைந்துள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். போர்ட் எலிசபெத்திலிருந்து ஜொகன்னஸ்பேர்க் சென்று கொண்டிருந்த ரயிலே நேற்று (வியாழக்கிழமை) இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தை தொடர்ந்து ரயில் தீப்பற்றி எரிந்த நிலையில் பெருமளவானோர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மாநில சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து சமிக்ஞையை மீறி கடக்க முற்பட்ட டிரக் மீது 700 பயணிகளுடன் பயணித்த ரயில் மோதியதுடன் ரயில் கடவையிலிருந்து விலகி தடம்புரண்டு தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகின்றது.

இதன்போது ரயிலில் முதலிரு பெட்டிகளில் பயணித்தவர்களே பெருமளவில் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவ இடத்தில் பொலிஸார், மீட்புப் படையினர் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

டிரக் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg