Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கியூப தலைவருடன் ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட தூதுவர் சந்திப்பு

In ஐரோப்பா
Published: 09:04 GMT, Jan 5, 2018 |
0 Comments
1124
icon_com
This post was written by : Elakkiya

ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தூதுவர் பெட்ரிகா மொஹெரினி மற்றும் கியூப தலைவர் ராகுல் காஸ்ரோ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று ஹவானாவில் இடம்பெற்றுள்ளது. உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நேற்று (வியாழக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

கரீபியன் தீவுகளுக்கான மொஹெரினியில் பயணத்தின் நிறைவில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஐரோப்பிய முதலீட்டு வங்கியிலிருந்து பிரதிநிதிகள் குழு ஒன்று இம்மாத இறுதியில் கியூபா செல்லவிருப்பதாக மொஹெரினி தெரிவித்துள்ளார். மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நிலையான விவசாயம், கலாசாரம் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றில் 49 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான கூட்டு ஒப்பந்தங்கள் விரைவில் கைச்சாத்திடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2015-2016 ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் கியூபாவுக்கு இடையில் சமரசம் ஏற்பட்ட நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் அனைத்து பொருளாதார தடைகளை கைவிட்டது. அதனைத் தொடர்ந்து கியூபாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் அரசியல் உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு உடன்பாடுகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)