Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குழந்தையே முக்கியம்! செரீனாவின் அதிரடி தீர்மானத்தால் இரசிகர்கள் கவலை

In டெனிஸ்
Updated: 08:14 GMT, Jan 5, 2018 | Published: 08:14 GMT, Jan 5, 2018 |
0 Comments
1575
This post was written by : Sujitharan

அமெரிக்காவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், நடைபெறவுள்ள கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்துடைய அவுஸ்ரேலிய பகிரங்க டெனிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

அவுஸ்திரேலியா பகிரங்க டென்னிஸ் தொடரின் ஒருங்கிணைப்பாளர்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

குறித்த போட்டி தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் செரினா வில்லியம்ஸ், இதனை அறிவித்துள்ளார்.

இந்த தொடரில் பங்கேற்க தான் பூரண உடற்தகுதியை பெறவில்லை என்பதாலும், தனது குழந்தையை பராமரிக்க வேண்டிய கட்டாயத்தினாலும், தான் இந்த தொடரிலிருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ள செரீனா, அதிகபட்சமாக விம்பிள்டன் மற்றும் அவுஸ்ரேலிய ஓபன் பட்டங்களை தலா 7 முறை வெற்றி கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg