Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிறைவடைந்தது குளிர்காலக் கூட்டத் தொடர்: நிறைவேற்றப்படாத முத்தலாக் மசோதா !

In இந்தியா
Updated: 11:19 GMT, Jan 5, 2018 | Published: 11:19 GMT, Jan 5, 2018 |
0 Comments
1142
This post was written by : Kemasiya

கடந்த ஆண்டு (2017) டிசெம்பர் 15ஆம் திகதி ஆரம்பமாகிய குளிர்கால கூட்டத்தொடர் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்படாமல் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைந்துள்ளது.

இதன் போது பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கைகொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்து விடைபெற்று கொண்டார்.

குறித்த கூட்டத்தொடர் 13 நாட்கள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்று இறுதிநாளாக இடம்பெற்றதால் பிரதமர் மோடி மன்மோகன்சிங் உட்பட, பல அமைச்சர்களுக்கு கைகொடுத்து தனது வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அடுத்த குளிர்காலக் கூட்டத்தொடர் குறித்த திகதி எதையும் அறிவிக்காமலும், முத்தலாக் மசோதாவை நிறைவேற்றாமலும் சபாநாயகர் குறித்த கூட்டத் தொடரை ஒத்திவைத்தார்.

முஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் மசோதா திருத்த சட்டத்திற்கு காங்கிரஸ் உட்பட பலரும் எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg