Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயம் ரவிக்கு நடிக்க கற்றுக் கொடுத்தார் மகன்!

In சினிமா
Updated: 11:29 GMT, Jan 5, 2018 | Published: 11:29 GMT, Jan 5, 2018 |
0 Comments
1212
This post was written by : Ravivarman

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘டிக் டிக் டிக்’ படத்தில் தனது மகன் ஆரவ் ரவி, தனக்கு நடிக்கக் கற்றுக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த ஜெயம் ரவி,

“இந்தப் படத்தின் மூலம் என்னுடைய மகன் ஆரவ் அறிமுகமாகியிருக்கிறார். அவரிடம் ஒரு நாள் இயக்குநர் இது போல் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது அதில் நடிக்கிறாயா? என கேட்டார் என்று சொன்னேன்.

அவனும் அதற்குச் சம்மதம் தெரிவித்தான். அதற்கு நடனம் தெரியவேண்டும் என்றேன். கற்றுக்கொள்ளலாம் என்றான் அவனுடைய இந்த ஆர்வம் படக்குழுவினரை கவர்ந்தது.

அதுபோல், படப்பிடிப்புத் தளத்தில் நான் மட்டுமல்ல, எல்லோரும் நடிக்கும் காட்சியைப் பார்த்துக் கொண்டே இருப்பான். ஒரு காட்சியில் நீங்கள் சரியா நடிக்கவில்லை. வசனம் மறந்து விட்டீர்கள் என்று கூறி இப்படி நடிங்க என்று கற்றுக் கொடுத்தான்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg