Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரான் நெருக்கடி: ஐ.நா.வின் கூட்டத்துக்கு ரஷ்யா கண்டனம்

In உலகம்
Published: 04:56 GMT, Jan 6, 2018 |
0 Comments
1167
This post was written by : Suganthini

ஈரானில் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக, ஐ.நா. பாதுகாப்புச்சபைக் கூட்டத்தைக் கூட்ட அமெரிக்கா தீர்மானித்தமைக்கு, ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.

உள்விவகாரங்களில் ஐ.நா. பாதுகாப்புச்சபை தலையிடுவது, ஐ.நா.வின் உயர்மட்டத்தைப் பாதிக்குமென, ஐ.நா.வுக்கான ரஷ்யத் தூதுவர் வஸ்லி நெபென்சியா   (Vassily Nebenzia) தெரிவித்துள்ளார்.

ஈரானில் நிலவும் ஊழல் நிறைந்த ஆட்சியைக் கண்டித்தும் ஸ்திரமற்ற பொருளாதார நிலைமையைக் கண்டித்தும், அந்நாட்டில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கையின்போது ஏற்பட்ட வன்முறையில் 21 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், அவசரமாக ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு அமெரிக்கா கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இதற்கு மத்தியில் ரஷ்யாவும் நேற்று (வெள்ளிக்கிழமை) தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, ஐ.நா. பாதுகாப்புச் சபையிலுள்ள தனது நிரந்தர அங்கத்துவத்தை அமெரிக்கா துஷ்பிரயோகம் செய்வதாக, ஈரானியத் தூதுவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)