Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானுடனான ஒருநாள் போட்டி: டக்வேர்த் லூயிஸ் முறையில் நியூஸிலாந்து வெற்றி

In கிாிக்கட்
Updated: 06:18 GMT, Jan 6, 2018 | Published: 06:15 GMT, Jan 6, 2018 |
0 Comments
1162
icon_com
This post was written by : Elakkiya
i (3)

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறையில் 61 ஓட்டங்களால் நியூஸிலாந்து வெற்றிபெற்றுள்ளது.

வெலிங்டனில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 315 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் நியூஸிலாந்து அணியின் சார்பில் வில்லியம்ஸன் 115 ஓட்டங்களையும் முன்ரோ 58 ஓட்டங்களையும் நிக்கொல்ஸ் 50 ஓட்டங்களையும் குப்தில் 48 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் ஹசன் அலி 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

தொடர்ந்து 316 என்ற ஓட்ட இலக்குடன் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 30.1 ஓவர் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி தாமதமாகியது.

எனினும் தொடர்ந்தும் மழை பெய்ததால் டக்வேர்த் லூயிஸ் முறைப்படி வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 61 ஓட்டங்களால் நியூஸிலாந்து வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)