Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடலில் காணாமல் போன மாணவனின் சடலம் கண்டெடுப்பு!

In இலங்கை
Published: 07:11 GMT, Jan 6, 2018 |
0 Comments
1093
This post was written by : Ravivarman
tewas (1)

ஏறாவூர் புன்னைக்குடா கடலில் நீராடிய நிலையில் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மாணவன் இன்று (சனிக்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய அப்துல் ஸலாம் அஸ்பஹான் எனும் மாணவனின் சடலமே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் சத்தாம் ஹூஸைன் கிராமத்தை வசிப்பிடமாக கொண்ட இம்மாணவன் வெள்ளிக்கிழமை பிற்பகல் புன்னைக்குடா கடலில் நீராடிக் கொண்டிருக்கும்போது காணாமல் போயிருந்தார்.

உடனடியாக மீனவர்களும் கடற்படையினரும் தேடுதலில் ஈடுபட்டபோதும் மறுநாள் சனிக்கிழமையே அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

உடற்கூறு பரிசோதனைக்காக சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)