Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனிக்கு துருக்கிய வெளிவிவகார அமைச்சர் விஜயம்

In ஐரோப்பா
Published: 10:43 GMT, Jan 6, 2018 |
0 Comments
1054
This post was written by : Suganthini
turkey

ஜேர்மனிக்கு விஜயம் செய்யும் துருக்கிய வெளிவிவகார அமைச்சர்  Mevlut Cavusoglu, ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர் சிக்மர் கப்ரியலை இன்று (சனிக்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர் சிக்மர் கப்ரியலின் அழைப்பின் பேரில் ஜேர்மனிக்குச் செல்லும் துருக்கிய வெளிவிவகார அமைச்சர், பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளார்.

அத்துடன், அண்மைக்காலமாக இரு நாடுகளுக்குமிடையில் பாதிக்கப்பட்டிருந்த உறவைப் பலப்படுத்துவது தொடர்பாகவும், இவர்கள் இருவரும் கவனஞ்செலுத்தவுள்ளதாகவும், அந்த ஊடகம் கூறியுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு துருக்கியில் இடம்பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி மற்றும் துருக்கியில் ஜேர்மனியப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டமையைத் தொடர்ந்து, ஜேர்மனிக்கும் துருக்கிக்குமிடையிலான உறவு பாதிக்கப்பட்டிருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)