Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னார், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் கடிதத்தினால் சர்ச்சை!

In இலங்கை
Published: 16:13 GMT, Jan 6, 2018 |
0 Comments
1179
icon_com
This post was written by : Ravivarman
LETTER-MANNAR - Copy - Copy

மன்னார் மாவட்டத் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் செயலாளரினால் கையொப்பமிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் மாவட்டத் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தில் கடமையாற்றுகின்ற சில பணியாளர்களுக்கு கடந்த 4 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் காணப்பட்ட சில தவறுகளே மேற்படி சர்ச்சைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,’2018 ஆம் ஆண்டிற்கான புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுவதுடன், பொது மக்களது போக்குவரத்து நலன் கருதி நேரக்கணிப்பாளராக பணி செய்யும் தாங்கள் எம்முடன் உடன்படிக்கை செய்து கொண்ட அகக்கட்டுப்பாட்டினை ஒழுங்கான முறையில் கடைபிடிக்க நினைவூட்டுகின்றோம்.

குறிப்பாக கடமையினை உரிய நேரத்திற்கு பொறுப்பெடுத்தல், சேவையில் ஈடுபடும் ஊர்திகளுக்கு தவறாது சந்தாப்பணம் அறவீட்டுத்துண்டு போட்டு கணக்கு முடித்தல், நாள் வரவு பதிவேட்டில் ஒப்பமிடுதல், ‘புகைத்தல், மது போதையில் பணியில் ஈடுபடுதல் ஆகியவற்றினையும் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டும்.

அத்துடன் பொது மக்களது போக்குவரத்துக்கு முதன்மை அலுவலராக பணி செய்யும் தாங்கள் முற்கோபம், பொறுமையிழந்து பேசுதல் ஆகியவற்றினைக் குறைத்துப் பணியில் ஈடுபடுமாறும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்’ என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அகக்கட்டுப்பாட்டினை ஒழுங்கான முறையில் கடைபிடிக்க நினைவூட்டும் குறித்த கடிதத்தில் ‘புகைத்தல், மது போதையில் பணியில் ஈடுபடுதல் ஆகியவற்றினையும் மிக முக்கியமாக கடைபிடிக்குமாறு’ என குறிப்பிடப்பட்டுள்ளமை பணியாளர்கள் மத்தியில் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)