Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வடகொரியா சம்மதம்!

In உலகம்
Published: 04:10 GMT, Jan 7, 2018 |
0 Comments
1147
This post was written by : Suganthini
north

தென்கொரியாவில் எதிர்வரும் பெப்ரவரியில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வடகொரியா விருப்பம் தெரிவித்துள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்கவுள்ளமை தொடர்பாக, சர்வதேச ஒலிம்பிக் குழுவின் வடகொரியாவுக்கான பிரதிநிதி ஸாங் உங் (Chang Ung), பீஜிங் விமான நிலையத்தில் நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளார்.

தென்கொரியாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வகையில், வடகொரியாவிலிருந்து குழுவொன்றை அனுப்பக் கவனஞ்செலுத்தி வருவதாக, தனது புத்தாண்டுச் செய்தியில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் அறிவித்திருந்தார்.

வடகொரிய ஜனாதிபதியின் அறிவிப்பைக் கவனத்திற்கொண்ட தென்கொரியா, வடகொரிய குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது தொடர்பாக இம்மாதம் 9ஆம் திகதி கலந்துரையாட  வடகொரியாவுக்கு  அழைப்பு விடுத்தது.  இந்த அழைப்பை வடகொரியா ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ளதாக, ஸாங் உங் அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்குமிடையிலான கலந்துரையாடலுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளார். ஒலிம்பிக் போட்டி தொடர்பாக, மேற்படி இரு நாடுகளுக்குமிடையில் நடைபெறும்   கலந்துரையாடல் மூலம், சிறந்த அணுகுமுறை எட்டப்படுமென்று நம்புவதாகவும், ட்ரம்ப் கூறியுள்ளார்.

அத்துடன், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த தாம் விரும்புவதாகவும், ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg