Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழர்களின் நிலை குறித்தும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் விசேட கலந்துரையாடல்!

In இலங்கை
Updated: 05:17 GMT, Jan 7, 2018 | Published: 05:17 GMT, Jan 7, 2018 |
0 Comments
1097
This post was written by : Anojkiyan

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களின் தற்போதைய நிலை குறித்தும் எதிர்கால அபிவிருத்தி மற்றும் இருப்புகள் குறித்து விஷேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு-கல்லடி, உப்போடை துளசிமண்டபத்தில் நேற்று (சனிக்கிழமை) குறித்த கலந்துரையாடர் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் போது, யுத்ததின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. மேலும், கடந்த காலத்தில் தமிழர்கள் எதிர்நோக்கும் காணி மற்றும் பொருளாதார அபிவிருத்தி, அரசியல்செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் முன்கொண்டுசெல்லவேண்டிய பணிகள் குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டன.

குறிப்பாக எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் கிழக்கு மாகாணசபையினை தமிழர்கள் கைப்பற்றுவதற்காக மேற்கொள்ளப்படவேண்டிய வியுகம் குறித்தும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இதனைதொடர்ந்து, முதல் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலகங்கள் தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டன. தமிழர்கள் வாழும் பகுதிகளை மையப்படுத்தியதாக கொண்ட பிரதேச செயலகப்பிரிவில் இருந்து அரசியல் சார்பற்ற ஐந்து பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டன.

சிரேஸ்ட சட்டத்தரணி த.சிவநாதன், சிரேஸ்ட ஆய்வாளர் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள புத்திஜீவிகளும், கல்விமான்கள், சமூக சேவையாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

2.o.jpeg - Copy (2) - Copy

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg