Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதல் போட்டியில் சிந்து அசத்தல் வெற்றி!

In விளையாட்டு
Updated: 07:07 GMT, Jan 7, 2018 | Published: 07:07 GMT, Jan 7, 2018 |
0 Comments
1136
This post was written by : Puvanes

3ஆவது பிரிமியர் பட்மிண்டன் லீக் (பி.பி.எல்) போட்டித்தொடரின் முதல் போட்டியில் பி.வி.சிந்து வெற்றியடைந்துள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) சென்னையில் நடந்த குறித்த போட்டியில் சிந்து, அஹமதாபாத் அணியின் தியா – சூயிங்குடன் பலப்பரீட்சையில் ஈடுபட்டார்.

சிறப்பாக ஆடிய சிந்து 15-11, 10-15, 15-12 என்ற செட் கணக்கின் அடிப்படையில் தியாவை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார்.

மேலும், குறித்த தொடரில் ஆண்கள் ஒன்றையர் பிரிவு போட்டி ஒன்றில் அஹமதாபாத்தின் சவுரவ் சர்மா மற்றும் சென்னையில் பிரைஸ் லெவர்டெஸ் ஆகியோர் பலப்பரீட்சை செய்துகொண்டனர்.

சென்னை வீரருக்கு பாரிய சவாலாக செயற்பட்ட சவுரவ் 12-15, 15-14, 15-12 என்ற செட் கணக்கில் பிரைசை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார்.

கடந்த 23ஆம் திகதி ஆரம்பமான குறித்த சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் 14ஆம் திகதிவரையிலும் நடைபெறவுள்ளது. இதில் சென்னை ஸ்மாஷர்ஸ், அஹமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ், லக்னோ அவாதே வாரியர்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், டெல்லி டாஷர்ஸ், ஐதராபாத் ஹன்டர்ஸ், மும்பை ரொக்கெட்ஸ், நோர்த்ஈஸ்டர்ன் வோரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg