Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இனவாதங்களை ஏற்படுத்துவது தமிழ் தேசியம் பேசுபவர்களின் கைவந்த கலை: வடிவேல் கண்ணன்

In இலங்கை
Published: 08:42 GMT, Jan 7, 2018 |
0 Comments
1089
icon_com
This post was written by : Anojkiyan

இனவாதங்களை ஏற்படுத்துவது மற்றும் இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்துவது என்பன தமிழ் தேசியம் பேசுபவர்களின் கைவந்த கலை என களுவாஞ்சிகுடி வட்டாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வடிவேல் கண்ணன் தெரிவித்துள்ளார்.

நேற்று (சனிக்கிழமை), களுவாஞ்சிகுடி முன்னாள் கிராமத் தலைவர் மு.வாமதேவன் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் எமது களுவாஞ்சிகுடிப் பிரதேசம் அபிவிருத்தியில் மிகவும் அடிமட்டத்தில் காணப்படுகின்றது. இந்நிலையில் சமஷ்ட்டி, தமிழ் தேசியம், சுயநிர்ணய உரிமை, போன்றவற்றைத் தெரிவிக்கின்றவர்கள் அடிப்படையில் அந்த சொற்களுக்கு அர்த்தம் கூடக் கற்பிக்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள். அவ்வாறானவர்கள் வந்து சொன்னால் மக்கள் வாக்களித்துவிடுவார்கள், அப்போது அவர்கள் தீர்மானிக்கும் வேட்பாளர்கள் வெற்றிபெற்று விடுவார்கள் என்ற தங்களது அரசியல் சாதுரியத்தை மக்களுடன் ஒன்றித்து சொல்லிச், சொல்லி செயற்பட்ட அரசியல் காய் நகர்த்தல்களெல்லம் படிப்படியாக தற்போது தகர்ந்து போய்க் கொண்டிருக்கின்றது.

இனவாதங்களை ஏற்படுத்துவதும், இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்துவதும் தமிழ் தேசியம் பேசுபவர்களின் கைவந்த கலையாகிவிட்டது. இவ்வாறானவர்கள் அரசியலில் வெற்றி பெற்று விட்டால் பின்வழியால் என்னவெல்லாம் பெற்றுக் கொள்கின்றார்கள் என்பதையெல்லாம் சிந்திப்பது கிடையாது. வடமாகாணத்தில் இம்முறைகூட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் விஜயகல மகேஸ்வரன், ஆகியோரை அந்த மக்கள் தெரிவு செய்துள்ளார்கள். அதுபோல் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என வடபுலத்து மக்கள் திட்டமிட்டு விட்டார்கள். எனவே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசியல் வாதிகளின் பின்புலத்தைப் பார்த்தால் எமது தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எந்த அரசியல்வாதியும் திட்ட முன்மொழிவுகளைக் கொடுத்து தொழிற்போட்டைகளை அமைத்து குறைந்த பட்சம் 500 பேருக்காவது வேலைவாய்ப்புக்களை வழங்கியிருக்கின்றோம் என்பதைச் சொல்வார்களா? அல்லது காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஏதாவது ஆக்க பூர்வமாக செய்பாடுகளை அவர்கள் முன்னெடுத்துள்ளார்களா என்பதைச் சொல்வார்களா?

புனர்வாழ்வழிக்கப்பட்ட முன்னாள் போராழிகளின் வாழ்வாதாரம் தொடர்பில் ஏதாவது நடவடிக்கைகைகள் எடுத்துள்ளார்கள் என்பதைச் சொல்வார்களா? இத்தனைக்கெல்லாம் ஒரு துப்பில்லாத அரசியல்வாதிகள், தேர்தல் ஒன்று வந்துவிட்டால் இனரீதியான கருத்துக்களைத் தெரிவித்து வரும் கருத்துக்களைத் தவிர்க்க வேண்டும்’ என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)