Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காங்கேசன்துறை – சிதம்பரம் கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்!

In இலங்கை
Published: 09:54 GMT, Jan 7, 2018 |
0 Comments
1121
icon_com
This post was written by : Ravivarman

காங்கேசன்துறைக்கும், இந்தியாவின் சிதம்பரத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

யாழ்.ஆளுநனர் அலுவலகத்தில் வைத்து நேற்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தொவிக்கையில்,

‘காங்கேசன்துறைக்கும், சிதம்பரத்திற்கும் இடையிலான இந்த கப்பல் சேவையை ஆரம்பிக்க இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளும் இணங்கியுள்ளன. ஆனால் தற்போது போக்குவரத்துக்கு தேவையான கப்பலை அடையாளம் காண்பதே பிரச்சினையாகவுள்ளது.

ஆரம்பத்தில் சிதம்பரம் கோயிலுக்குசெல்லும் பக்தர்களும், மதத்தலைவர்களும் இந்த கப்பல்  பயணத்திற்கான அனுமதியைக் கோரியிருந்தாலும் தற்போது அதற்கான கப்பல் தேவையாகவுள்ளது.
எனவே ஒரு கப்பலை அடையாளம் காண நான் முயற்சிக்கின்றேன்.

கடற்படையிடம் இருந்து கப்பலைப் பெற்றுக்கொள்வதே எமது முதலாவது நோக்கம் அப்படியானால் அதற்கும் இந்திய அரசாங்கத்தினது அனுமதி அவசியம்.அல்லது அரசாங்கத்தின் அனுமதியுடன், இந்தியக் கடற்படையிடம் இருந்து கப்பலை பெற்றுக் கொள்வது இந்த இரு யோசனைகளையும் குறிப்பிட்டு இந்திய தூதுவராலயத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதற்கமைய ஒருவார காலத்திற்குள் அதற்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்” என ஆளுநர் ரெஜினோல்ட் குரே மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)