Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்கொரியாவிற்கு விளையாடச் செல்கின்றது வடகொரியா!

In விளையாட்டு
Published: 10:08 GMT, Jan 7, 2018 |
0 Comments
1166
This post was written by : Puvanes
north001

தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வடகொரியா சம்மதம் தெரிவித்துள்ளது.

சீனதலைநகர் பீஜிங்கில் அண்மையில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது வடகொரிய சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் வடகொரியாவுக்கான பிரதிநிதி சாங் உங் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

தென்கொரியாவின் பியங்சாங் நகரில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகி பெப்ரவரி 25 ஆம் திகதி வரை இந்தப் போட்டிகள் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதிவரை வரைநடைபெறவுள்ளன.

எனினும் தென்கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்து காணப்பட்டதால் ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா பங்கேற்பதில் பலதரப்பட்ட சந்தேகங்கள் எழுந்தன.

இந்தநிலையில் புத்தாண்டு தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தமது நாட்டு வீர வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என அறித்தார்.

அதேபோன்று வடகொரிய பிரதிநிதி சாங் உங்கும் இதே தகவலை வெளிப்படுத்தியுள்ளதால்,தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வடகொரியா இணங்கியுள்ளமை உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)