Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறுவர்களுக்கு அஸீட் விற்பனை இல்லை: வர்த்தகர்கள் சம்மதம்

In
Updated: 10:16 GMT, Jan 7, 2018 | Published: 10:16 GMT, Jan 7, 2018 |
0 Comments
1156
This post was written by : Suganthini

பிரித்தானியாவில் சிறுவர்களுக்கு அஸீட் விற்பனை செய்வதை நிறுத்துவதற்கு சில விற்பனையாளர்கள் இணங்கியுள்ளனர்.

இது தொடர்பான ஒப்பந்தத்தில் சில விற்பனையாளர்கள் கையொப்பமிட்டுள்ளதாக, ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் கடந்த காலங்களில் அஸீட் வீச்சுத் தாக்குதல்கள் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 18 வயதுக்குக் கீழ்பட்டவர்களுக்கு அஸீட் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஊடகம் கூறியுள்ளது.

அண்மையில் பிரித்தானியாவில் இரவுவேளை களியாட்ட விடுதியில் இடம்பெற்ற அஸீட் வீச்சுத் தாக்குதலில், 22 பேர் காயமடைந்துள்ளதுடன், இந்தத் தாக்குதலை நடத்தியவருக்கு 20 வருடகால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg