Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சகோதரியை காப்பாற்ற உதவிகோரும் கனேடிய யுவதி!

In கனடா
Published: 12:19 GMT, Jan 7, 2018 |
0 Comments
1053
icon_com
This post was written by : Puvanes
canada005

கனடாவில் வாகன விபத்து ஒன்றில் சிக்கி மோசமாக பாதிக்கப்பட்ட யுவதி ஒருவரின் மருத்துவ செலவுக்காக அவருடைய சகோதரி மேற்கொண்ட நடவடிக்கை வெகுவாக பேசப்பட்டு வருகின்றது.

கடந்த 25ஆம் திகதி கார் ஒன்று பாதையை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது காரில் பயணித்த சப்ரினா மன்கோன் (வயது 18) மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் படுகாயமடைந்த யுவதியின் கைகள் மற்றும் கால்கள் மருத்துவச் சிகிச்சைக்காக அகற்றப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து சப்ரினாவின் மருத்துவச் செலவுகளுக்காக 200000 அமெரிக்க டொலர்கள் அவசியம் என அவருடைய சகோதரி சமந்தா நிதிச்சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

சகோதரிக்காக அவர் நிதிச்சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதை அறிந்த ஏராளமானோர் அவருக்கு உதவி செய்து வருகின்றதாக குறிப்பிடப்படுகின்றது. அதன்படி தற்போது 90000 டொலர்கள் வரை சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சமூகவலைத்தளங்களில் இந்த விடயம் தொடர்பாக அதிகமான அனுதாப கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)