Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்பெய்னில் கடுமையான பனிப்பொழிவு: போக்குவரத்தில் பாதிப்பு

In
Updated: 12:36 GMT, Jan 7, 2018 | Published: 12:36 GMT, Jan 7, 2018 |
0 Comments
1081
This post was written by : Suganthini

ஸ்பெய்னில் கடுமையான பனிப்பொழிவைத் தொடர்ந்து, பல வீதிகளுடான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்பெய்னில் நேற்று (சனிக்கிழமை) கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டதால், வீதிகளில் பனிக்கட்டிகள் உறைந்து காணப்பட்டன. இதன் காரணமாக வீதிகளூடான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், ஏபி.6 நெடுஞ்சாலையில சுமார் 4 ஆயிரம் வாகனங்கள் பயணிக்க முடியாத நிலையில், நேற்றிரவு சிக்கியிருந்ததுடன், வாகனங்களில் பயணித்தவர்களும் தமது இரவுப்பொழுதை இடைவழியிலேயே கழிக்க நேர்ந்ததாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை, ஸ்பெய்னின் 37 மாகாணங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடுமையான பனிப்பொழிவு, கடும் காற்று மற்றும் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக, அந்நாட்டு வானிலை நிலையம் எச்சரித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg