Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிணைமுறி அறிக்கையின் பிரதியை வழங்குமாறு ரவி கோரிக்கை (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 12:11 GMT, Jan 8, 2018 | Published: 05:24 GMT, Jan 8, 2018 |
0 Comments
1084
This post was written by : Anojkiyan
Ravi-Karu

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பிரதியொன்றை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

முறி மோசடி விவகாரம் குறித்த தரவுகளை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்ளும் வகையில் இன்று (திங்கட்கிழமை) ஐனாதிபதி செயலகத்திற்கு விஜயம் செய்த அவர், இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பிணைமுறி விவகாரத்தில் ரவி கருணாநாயக்க குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அறிக்கையின் பிரதியை பெற்று அதனை விரிவாக ஆராய்ந்த பின்னர் அது குறித்து பதிலளிப்பதாகக் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐனாதிபதி செயலகம் விரைகிறார் ரவி- அடுத்த கட்ட நகர்வு என்ன?

அரசியல் களத்தில் சூடு பிடித்துள்ள பிணை முறி மோசடி விவகாரம் குறித்து அறிந்துக்கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, ஐனாதிபதி செயலகம் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று (திங்கட்கிழமை) மதியம் 12 மணிக்கு அவர் முறி மோசடி விவகாரம் குறித்த தகவல்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்வதற்காக, ஐனாதிபதி செயலகம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு தனது விசாரணை அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த 31ஆம் திகதி கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)